Posts

Showing posts from November, 2021
Image
பாலு மகேந்திராவிற்கு கமல்ஹாசன் செய்த உதவி   சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் சிறந்த இயக்கத்திற்காகவும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள பாலு மகேந்திரா " நாற்பதாண்டு சினிமா பயணத்தில் நான் நினைத்த மாதிரி மூன்று படங்களைத்தான் என்னால் பண்ண முடிந்தது" என்று சொல்லியிருக்கிறார்.   “ விருதுகளைப் பொ று த்தவரைக்கும் கலைஞர்களுக்கு அவைகள் ஒரு அங்கீகாரம்.   அவ்வளவுதான். அதனால்தான் அந்த விருதுகள் குறித்து நான் என்றும் கவலைப்படு      வதில்லை. என்னுடைய ‘ ஜுலி கணபதி ’ திரைப்படம் விருதுக்கு அனுப்பப்படவே இல்லை.அது குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை ” என்று கூறி இருக்கிறார் அவர்.                                  ஆரம்ப காலம் முதலே பாலு மகேந்திரா தனது கதைகளுக்கான நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரே தவிர நடிகர்களுக்காக கதை எழுதியதே இல்லை.   அதே போன்று தமிழ்ப் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளிலும் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. “ எந்த ஊரிலாவது நமது படங்களில் வருவதுபோல காத லர்கள் ஒரே மாதிரி ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்களா ? அவர்கள் போதா தென்று ஒரே மாதிரி உடையணிந்த முப்பது நாற்ப
Image
ரஜினிக்கு பாலசந்தர் சொன்ன அறிவுரை   “ அபூர்வராகங்கள்" படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த கால கட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத் திக்கொண்டிருந்தது.அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒருமாணவர் பயின்று கொண்டிருந்தார் . அவர் பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட் .   இரண்டாண்டுபயிற்சிமுடிந்ததும்அந்த பள்ளி மாணவர்களின் திறமையை எடைபோட இரண்டு திரைப்பட இயக்குனர்கள் அந்த பயிற்சிப் பள்ளிக்கு வந்தார்கள் . ஒருவர் எண் ணற்ற வித்தியாசமான படைப்புகளால் தமிழ்ப் படங்களின் போக்கையே மாற்றிய இயக்குனர் சிகரம் கே . பாலச்சந்தர் . இன்னொருவர்  சித்தலிங்கையா என்ற கன்னடப்பட இயக்குனர்.   அற்புதமான பல கன்னடத் திரைப் படங்களைத் தந்த அவருடைய மகன்தான் நடிகர் முரளி.  பாலச்சந்தர் இயக்கிய “அரங்கேற்றம்,அவள்ஒருதொடர்கதை”ஆகிய இரண்டு படங்களும் சிவாஜி ராவ் மனதிற்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படங்கள். பாலச்சந்தரை எப்படி யாவது ஒருமுறை சந்தித்துவிடவேண்டும் என்று அவர் துடித் துக்கொண்டிருந்தபோது தான் அவரே நடிப்புப்பள்ளிக்கு வரப்போகிறார் என்ற செய்தி சிவாஜிரா
Image
  பெண் இனத்துக்கு பெருமை சேர்த்த தங்கத் தலைவி   அரசியல் வானில் எண்ணற்ற   அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய , இருபத்தி நான்கு மணி   நேரமும் தமிழக மக்களின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த , ஒரு ஆட்சியாளருக்கு எப்படிப்பட்ட ஒரு ஆளுமை இருக்க வேண்டும் என்று இந்த உலகத்துக்கு எடுத்துச் சொன்ன ஒரு தன்னிகரில்லாத அரசியல் தலைவிதான் தமிழக மக்கள் அம்மா என்று உள்ளன்போடு போற்றிய   ஜெயலலிதா. ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் அரசியலில் காலடி எடுத்து வைத்து , தனது அயராத உழைப்பால் ஆறுமுறை தமிழக முதல்வராக முடி சூட்டிக் கொண்ட ஒப்பற்ற தலைவியான   ஜெயலலிதா வை   அவர் நடிகை யாக இருந்த காலத்திலிருந்து நான் நன்கு அறிவேன் . அப்போது நான் பத்திரிகை யாளனாக இருந்தேன் . அதுதவிர “திரைக்கதிர்” என்ற பெயரிலே சொந்தமாக பத்திரிகை ஒன்றும் நடத்திக் கொண்டிருந்தேன் . இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயலலிதா   நடித்த வெற்றிப்படங்களான “சூர்யகாந்தி . அன்பைத்தேடி , அவன்தான் மனிதன் , பாக்தாத்   பேரழகி ,” உட்பட   பல திரைப்படங்களுக்கு நான்தான் பத்திரிகைத் தொடர்பாளர் . தமிழ்த் திரையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க