Posts

Showing posts from October, 2021
Image
  காதலனுக்காக வசதியான வாழ்க்கையைத் துறந்த பானுமதி  சாதாரண ஒரு உதவி இயக்குனராக இருந்த ராமகிருஷ்ணா முன்னணி கதாநாயகி யாக இருந்த தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகள் விதிப் பார் என்று பானுமதியின் தந்தை வெங்கட சுப்பையா கனவிலும் எதிர்பார்க்க வில்லை . அதனால்தான் " உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால்   திருமணத்திற்குப் பிறகு அவர்   கச்சேரிகளில் பாடவோ சினிமாவில் நடிக்கவோ கூடாது " என்று   ராமகிருஷ்ணா நிபந்தனை விதித்தபோது   அவர் பொங்கி எழுந்தார் . சினிமாவில் நடிக்கக் கூடாது என்பதில்   வேண்டுமானால் அவர் உறுதியாக இருப்பாரே தவிர பாட்டுக்கச்சேரி நடத்த அவர் தடை சொல்ல மாட்டார் என்று தனது உறவினர்கள் சொன்னதும் கோபம் தணிந்த அவர் " பானுமதி கச்சேரிகளில் பாட மட்டுமாவது அனுமதியுங்கள் " என்று ராமகிருஷ்ணாவைப் பார்த்து கேட்டுக் கொண்டார் . அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது மட்டுமின்றி   எந்த தந்தையாக இருந் தாலும் ஆத்திரம் அடையக்கூடிய தனது இன்னொரு நிபந்தனையையும்   அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணா . “எனக்கு மனைவியாக வருகின்றவர் எனக்கு ஒர
Image
 பானுமதியின் காதல் கதை   தமிழ்த் திரையுலகம் எத்தனையோ நடிகைகளை சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்டவர் பானுமதி. நடிகைகளில் அவர் ஒரு துருவ நட்சத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்தாளர்,பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று தமிழ் தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்த பானுமதி “நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை” என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.   படங்களில்  நடிக்கும்போது  பானுமதியைத்  தொட்டுப் பேசக் கூட அவரது கதா நாயகர்கள் தயங்குவார்களாம் . பல கதாநாயகர்கள் இந்தக் காட்சியில் இந்த வசனத்தைப் பேசும்போது உங்களது கையைத் தொடுவேன் என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டு த் தான்  அவரது கையைத் தொடுவார்களாம். அந்த அளவிற்கு தனித் தன்மையோடு இருந்த ஒரு நடிகைதான் பானுமதி. தவறு என்று மனதுக்குப் பட்டுவிட்டால் அதைத் தட்டிக் கேட்கத் தயங்காத கண்ணியமிக்க ஒரு நடிகையாக அவர் திகழ்ந் தார் . பெயர் சொல்லி எம்.ஜி.ஆரை அழைக்க இயக்குனர்களும்   தயாரிப்பாளர்களும் தயங்கிய கால கட்டத்தில்" மிஸ்டர் ராமச்சந்திரன்" என்று உரிமையோடு அவரை