
ஒரு ருபாய் சம்பலத்திற்கு நடிக்க தயாராக இருந்த கதாநாயகர் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவராக விளங்கிய ஏவி. மெய்யப்ப செட்டியா ரின் இஷ்ட தெய்வம் முருகர். அதனால்தான் அவரது பிள்ளைகளுக்குக் கூட பழனியப்பன் , முருகன், குமரன் சரவணன்,பாலசுப்ரமணியன் என்று முருகக் கடவுளின் பெயர்களையே வைத்தார். முருகக் கடவுளின் திருவிளையாடல்களை “ஸ்ரீ வள்ளி” என்ற பெயரிலே தயாரிக்க முடிவு செய்த ஏவி.எம் அந்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலே முருகக் கட வுளின் கோவில்கள் பலவற்றிற்கு சென்று முரு கப் பெருமானிடம் வித்தியாச மான வேண்டுகோள் ஒன்றை வைத்தார் “ஸ்ரீ வள்ளி” திரைப்படம் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கதையைப் படமாக்கும்போது என்னையும் அறியாமல் நான் சில தவறுகள் செய்ய லாம் . அதற்காக என்னை மன்னித்துக் கொள் அப்பா ” என்று முருகனிடம் மனமார வேண்டிக் கொண்டு வந்த பிறகே அப்படத்தைத் தொடங்கினார் அவர் வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்துவிட்டு முருகர் வேடத் தில் நடிக்க நல்ல குரல் வளம் மிக் க நடி...