
எம். ஜி. ஆருக்கும் பானுமதிக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதல்கள் "நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை" என்று அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட நடிகையான பானுமதி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்த ஒரு நடிகை . நடிப்பில் மட்டுமின்றி பழ கு ம் விதத்திலும் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டவர் அவர் . காட்சிகளில் நடிக்கும் போது அவரது கைளைப் பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டுமென்றால் கூட உடன் நடிக்கும் கதாநாயக நடிகர்கள் அவரிடம் முன்னதாகவே அனுமதி பெற்றுக் கொண்டுதான் அவரது கையைத் தொடுவார்களாம் . அந்த அளவு தனக்கென ஒரு தனி கவுரவத்தை திரையுலகில் அவர் பெற்றிருந்தார். “ கள்வனின் காதலி , ரங்கூன் ராதா ஆகிய படங்களில் ஒரு விசேஷம் என்னவென்றால் அந்த படங்களில் நான் ஒரு பெரிய நடிகையுடன் நடித்தேன் என்பதுதான் . அவர்களுடன் நடிக்கும்போது எனக்கு ஒரு புது அனுபவம் ஏற்பட்டது . பல படங்களில் பானுமதி அவர்களுடன் நடித்தேன் என்பது எனக்குப் பெருமை ” என்று நடிப்பிற்கு பொருளாக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்களே பானுமதியைப் பாராட்டியிருக்கிறார் என்றால் பானுமதி யின் தி...