Posts

Image
  முதல் படத்தில் சிவாஜி சந்தித்த எதிர்ப்புகள் ஏவி.எம்.நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ. பெருமாள் ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார்.அவர் ஒரு நாணயமான விநியோகஸ்தர் என்பதால் அவருடன் இணைந்து படம் தயாரிக்க முன்வந்த மெய்யப்ப செட்டியார் “பராசக்தி” நாடகத்தைப் படமாக்கலாம் என்று   முடிவு செய்து அந்த நாடகத்தின் உரிமைகளை வாங்கினார்.  “பராசக்தி, நூர்ஜகான்” ஆகிய நாடகங்கள் பெருமாள் முதலியாரின் சொந்த ஊரான வேலூரிலே நடைபெற்றபோது அந்த நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசனின் அபாரமான நடிப்புத் திறனில் மனதைப் பறி கொடுத்திருந்த பெருமாள் முதலியார் எப்படியாவது சிவாஜி கணேசனை அந்தப் படத்திலே நடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் மெய்யப்ப செட்டியாரோ கே.   ஆர். ராமசாமியை   கதாநாயகனாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் சிவாஜி நடிக்கும் நாடகத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் ஒரு முறை பார்த்தார் என்றால் நிச்சயம் தனது மனதை மாற்றிக் கொள்வார் என்று திடமாக நம்பிய பெருமாள் முதலியார் சிவாஜி நடித்த “பராசக்தி”நாடகத்தை
Image
  எம் ஜி ஆருக்கும் தங்கவேலுவிற்கும் இருந்த ஒற்றுமைகள் எம் . ஜி . ஆரோடு எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கே . ஏ . தங்கவேலு என்பதை எல்லோரும் அறிவார்கள் . ஆனால் எம். ஜி. ஆருக்கும் தங்கவேலுவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு என்பதை சினிமா உலகிலுள்ள பல ர் கூட அறிந்திருக்க மாட்டார்கள்.    எம். ஜி. ஆர் பிறந்த அதே 1917 ஆம் ஆண்டில், அவர் பிறந்த அதே ஜனவரி மாதத்தில் பிறந்தவர்தான் கே . ஏ . தங்கவேலு . எம்.ஜி.ஆர் பிறந்தது ஜனவரி 17 ஆம் தேதி . கே . ஏ . தங்கவேலு   பிறந்தது ஜனவரி 1 5 ஆம் தேதி . அந்த வகையில் எம். ஜி. ஆருக்கு   இரண்டு நாட்கள் மூத்தவர் அவர்   எம். ஜி. ஆர் அறிமுகமான “சதிலீலாவதி” படத்திலேதான் தங்கவேலுவும் அறி முகமானார் . எம். ஜி. ஆருக்கு திரைப்பட வாய்ப்பை ப் பெற்றுத் தந்த எம் . கே . ராதாதான் தங்க வேலுவிற்கும் சினிமா வாய்ப்பை ப் பெற்றுத் தந்தார் . “சதிலீலாவதி” படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத் தன . ஆனால் தங்கவேலுவிற்கு அடுத்த சினிமா வாய்ப்பு பதினைந்து ஆண்டுகளுக் குப் பிறகே கிடைத்தது . “சதி லீலாவதி” படத்திற்குப் பிறகு தங்க வேலு நட